×

10 ஆண்டுக்கு பிறகு தெலங்கானாவில் அரசியல் சாசனப்படி ஆட்சி: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சால் சர்ச்சை

திருமலை: நாடு முழுவதும் 75வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் நேற்று ஐதராபாத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசுகையில், ‘ தெலங்கானா உருவாகி முதன்முறையாக 10 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் சாசனத்தின் அடிப்படையிலான ஆட்சி தொடங்கியது. தெலங்கானாவில் மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை மதிக்கும் ஆட்சி உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் உத்வேகத்துடன், ஏழை, எளிய, நலிந்த பிரிவினர், கிஜான் மற்றும் சிறுபான்மையினரின் வளர்ச்சியை நோக்கி அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே மனப்பான்மையை அரசு தொடர வேண்டும். தெலங்கானா வில் அதிகளவில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளது’ என்றார். முந்தைய பிஆர்எஸ் கட்சி ஆட்சியை விமர்சிக்கும் வகையில் தமிழிசை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

* ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சுக்கு பிஆர்எஸ் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் ‘பாஜவும், காங்கிரசும் ஒரே கொள்கையை கொண்டுள்ளது. ஆளுநர் அரசியல் பின்னணியுடன் செயல்பட்டு வருகிறார். அவரை திரும்ப பெற வேண்டும் அல்லது ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்’ என பிஆர்எஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post 10 ஆண்டுக்கு பிறகு தெலங்கானாவில் அரசியல் சாசனப்படி ஆட்சி: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சால் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : Governor Tamilyasai Soundararajan ,75th Republic Day ,Telangana ,Governor ,Tamilyasai Soundarrajan ,Hyderabad ,
× RELATED சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக...